திருச்சியில் 8-ந்தேதி பொதுக்கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தி திருச்சியில் 8-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.;
சென்னை,
பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும், நீட் காரணமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் தமிழகத்தையே உலுக்கி எடுத்து விட்டது.
மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அனிதா மரணம் தொடர்பாகவும், நீட் தேர்வை எதிர்க்கும் வகையிலும் அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கியது. கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் காதர்மொய்தீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அழைப்பு விடுக்கப்பட்டிருந்த தே.மு.தி.க., ம.தி.மு.க., த.மா.கா. ஆகிய கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. கூட்டம் 7.30 மணிக்கு முடிவடைந்தது.
இந்த கூட்டத்தில் அனிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து, நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள் வருமாறு:-
* அனிதாவின் மரணத்தை தற்கொலை என்று கருதுவதை விட மத்திய, மாநில அரசுகள் தங்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் மூலம் நடத்திய கொலை என்றே இந்தக் கூட்டம் எண்ணுகிறது. அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தி விட்ட மத்திய பா.ஜ.க. அரசுக்கும், மாநில அ.தி.மு.க. அரசுக்கும் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மாணவி அனிதாவின் உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திரமோடியும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற, உரிய அழுத்தம் அளிக்கத் தவறிய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்க வேண்டுமென்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
* மாநில கல்வி திட்டத்தின் கீழ் படித்த தமிழகத்தை சார்ந்த லட்சக்கணக்கானோர் நாட்டின் முன்னேற்றத்திற்காக பணியாற்றிக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழக கல்வியில் தரமில்லை என்று மனுதர்ம கண்ணோட்டத்தோடு மத்திய பா.ஜ.க. ஆட்சியில் இருப்போர் திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
ஒரு மாநிலத்தில் தரமான கல்வியை வழங்குவது என்பது மாநில அரசின் உரிமை என்பதையும் அது குறித்த சட்டங்களை மாநில அரசே இயற்ற வேண்டும் என்பதையும் மத்திய அரசு உணர்ந்து, உடனடியாக கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இந்த கூட்டம் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் வலியுறுத்துகிறது.
இந்நிலையில், அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு காரணமான மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்கவும், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்கவும் உரிய அரசியல் சட்ட திருத்தங்களை மத்திய அரசு உடனே கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியும் முதற் கட்டமாக, 8-ம் தேதி திருச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-மாநில அளவில் போராட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், பொதுக்கூட்டம் மட்டும் நடத்த இருக்கிறீர்களே?
பதில்:-பொதுக்கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கு பெற இருக்கிறார்கள். இதுவே மாநில அளவிலான போராட்டமாக நிச்சயமாக அமையும்.
திசை திருப்பும் முயற்சி
கேள்வி:-பொதுக்கூட்டம் மூலமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமா?
பதில்:-அந்த நம்பிக்கையில் தான் இறங்கி இருக்கிறோம். பொதுக்கூட்டத்துக்கு பிறகு மத்திய அரசு விழிப்படையாவிட்டால் விழிப்படைய செய்யும் அளவுக்கு அடுத்தக் கட்ட நடவடிக்கை இருக்கும்.
கேள்வி:-தமிழக மருத்துவ மாணவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்:-அனிதாவின் தற்கொலைக்கு மத்திய-மாநில அரசுகளின் அலட்சியம் தான் காரணம்.
கேள்வி:-டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், டாக்டர் கிருஷ்ணசாமியும் அனிதா மரணத்திற்கான பழியை தி.மு.க. மீது சுமத்த முயற்சிக்கிறார்களே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:-மாணவி அனிதாவின் மரணத்தை திசை திருப்பும் முயற்சியில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், டாக்டர் கிருஷ்ணசாமியும் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதுகுறித்து நாங்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.