மக்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து அதிமுக அரசு செயல்படுகிறது முதல்-அமைச்சர் பழனிசாமி பேச்சு
மக்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து அதிமுக அரசு செயல்படுகிறது என பொன்னேரி பஞ்செட்டியில் நடைபெற்ற எம்,ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி பேசினார்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஞ்செட்டி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
திருவள்ளூர் தொழிற்சாலை மாவட்டமாக திகழ்கிறது. திருவள்ளூர் தொழிற்சாலை மற்றும் கல்வி மாவட்டமாக திகழ காரணமானவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஏரி உள்ள மாவட்டம் திருவள்ளூர். நாட்டு நலனுக்காக பாடுபட்ட தியாகிகளை எம்ஜிஆர் மறந்ததில்லை.
திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சிக்கு அதிமுக ஆட்சிகளே காரணம். திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூ.3,375 கோடியில் கப்பல் கட்டுமானக்கழகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கல்விச்சாலைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளன. போரூர் மேம்பாலம் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து அதிமுக அரசு செயல்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.