ஓ பன்னீர் செல்வத்துடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்திப்பு

முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்துடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.;

Update: 2017-08-18 08:20 GMT
சென்னை,

அதிமுகவின்  இரு அணிகள் இணைப்பு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ஓ பன்னீர் செல்வத்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.

முன்னாள் முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்தின் தாயார் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல் நலம் குறித்து அமைச்சர்கள் விசாரித்ததாக கூறப்படுகிறது.  அதிமுக அணிகள் இணைப்பில் முக்கிய நகர்வாக பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் சந்திப்பு கருதப்படுகிறது. 

மேலும் செய்திகள்