எங்களிடம் 115 எம்.எல் ஏக்கள் உள்ளனர்; பெரும்பான்மை இல்லாமல் இருக்கிறோம். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

எங்களிடம் 115 எம்.எல் ஏக்கள் உள்ளனர்,பெரும்பான்மை இல்லாமல் இருக்கிறோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி உள்ளார்.

Update: 2017-08-15 09:33 GMT
 சென்னை

திருவல்லிக்கேணியில்  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரும்பான்மை இல்லாமல் இருக்கிறோம்.  எங்களிடம் 115 எம்.எல் ஏக்கள் உள்ளனர்.  பெரும்பான்மையை காட்ட 2 எம்.எல்.ஏக்கள் தேவை.  பெரும்பான்மைக்கு தேவையான 2 எம்.எல்.ஏக்கள். விரைவில் வருவார்கள்.

 6 மாத அரசியல் சூழ்நிலை காரணமாக சின்னம்மா சசிகலாவாகி விட்டார். அதி.மு.க. வின் ஏணி என்பது ஜெயலலிதா  மட்டும் தான். எங்களுக்கு பணத்தாசை கிடையாது. அ.தி.மு.க. வில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இருக்காது

அ.தி.மு.க அணிகள் இணைவதில் கொஞ்சம் கருத்து வேறுபாடுகள் உள்ளன. தமிழக மக்களுக்கு நன்மை செய்ய மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்