அமைச்சர் செங்கோட்டையன் வருகைக்காக காத்து இருப்பேன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
அமைச்சர் செங்கோட்டையன் வருகைக்காக காத்திருப்பேன் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.;
சென்னை,
இதுதொடர்பாக பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் பற்றி விவாதம் நடத்த தயாரா? என அமைச்சர் செங்கோட்டையன் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட நான், அவரது விருப்பப்படியே வரும் 12-ந் தேதி மாலை 4 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கத்தில் விவாதம் நடத்தலாம் என்று அறிவித்திருந்தேன்.
அதில் பங்கேற்க வரும்படி அமைச்சர் செங்கோட்டை யனையும் அழைத்திருந்தேன். ஆனால், இதுகுறித்து பதிலளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், ‘அவர்கள் பேச்சுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர்கள் மீதே வழக்கு இருக்கிறது. அந்த வழக் கில் நிரபராதி என்று நிரூபித்துவிட்டு வந்து என்னிடம் பேசட்டும்’ என்று கூறியிருக்கிறார்.
13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்கிய செங்கோட்டையன் இப்போது தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கும் அதேபோல் கலந்தாய்வு நடத்தாமல், கையூட்டு வாங்கிக்கொண்டு இடமாறுதல் ஆணை வழங்குவது ஏன்? என்பது தான் எனது வினா. இதுகுறித்து விவாதிப்பதற்காகவே அமைச்சரை அழைக்கிறேன்.
என் மீதான குற்றச்சாட்டு ஏதேனும் இருந்தால் அதை விவாதத்தின்போது முன்வைக்கலாம். அதற்கு விளக்கமளிக்கிறேன். அதை விடுத்து ஒன்றும் பெறாத காரணங்களை கூறி விவாதத்திற்கு வராமல் புறமுதுகிட்டு ஓடுவது வீரமல்ல. நேர்மையும் அல்ல. செங்கோட்டையன் உண்மையாகவே நேர்மைத் திலகமாக இருந்தால் வெளிப்படையான முறையில் விவாதிக்கலாம்.
அதன் மூலம் தமிழக அரசியலில் ஆக்கப்பூர்வமான கலாசாரத்தை ஏற்படுத்தலாம். இந்த விவாதம் கல்வித்துறை வளர்ச்சி சார்ந்தது தானே தவிர தனிநபர்களின் வெற்றி தோல்விக்கானது அல்ல. அதனால் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் நடைபெறும் விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையனின் வருகைக்காக காத்திருப்பேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.