பெண் பத்திரிகையாளர் மீது சமூக வலைத்தள தாக்குதல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்
பெண் பத்திரிகையாளர் மீது சமூக வலைத்தள தாக்குதல் குறித்து மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.;
சென்னை, ஆக.10-
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறி இருப்பதாவது:-
ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ள ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மையின்மைக்கு இடமில்லை. பேச்சுரிமையின் குரல்வளையை நெரிக்கும் வகையில் சென்னையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் சமூக வலைத்தள தாக்குதல் மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது.
இதுபோன்ற அச்சுறுதல்களை விடுப்போருக்கு எதிராக, சட்டத்தின் ஆட்சி முறையாக பிரயோகிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.