தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற மத்திய அரசிடம் அழுத்தம் தரப்பட்டு உள்ளது அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற மத்திய அரசிடம் அழுத்தம் தரப்பட்டு உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.;
சென்னை
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அமைச்சர்கள் குழுவினர் டெல்லியில் முகாமிட்டு பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:–
கடந்த 2 தினங்களாக தமிழக அரசின் சார்பில், தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற மத்திய அரசிடம் அழுத்தம் தரப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி வருகிற 31–ந் தேதியுடன் கவுன்சிலை முடிக்க வேண்டும். காலநெருக்கடியை கருத்தில் கொண்டுதான் கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் விதிவிலக்கு தரவேண்டும் என தமிழக அரசின் அவசர சட்ட முன்வடிவை மத்திய உள்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது.
பிரதமரை சந்தித்து கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பாராளுமன்ற துணை சபாநாயகருடன் சென்று வலியுறுத்தப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் சட்ட சிக்கல் இருப்பதால் அனைத்து துறைகளிலும் கலந்து பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மத்திய சட்டத்துறை, சுகாதாரத்துறை அமைச்சர்களை சந்தித்தும் வலியுறுத்தினோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அவசர சட்டமுன்வடிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளனர்.
‘நீட்’ தேர்வு இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். உச்சநீதிமன்றத்தின் அமர்வு தீர்ப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதால்தான் சட்டசிக்கல் இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலமும் தராத ஒரு அழுத்தத்தை தமிழக அரசு மத்திய அரசுக்கு தந்து உள்ளது. தமிழக மாணவர்களின் நிலைமைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பலமாநிலங்களில் ஏற்கனவே நுழைவு தேர்வு நடத்தப்பட்டு பழக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மட்டும் தான் நுழைவு தேர்வு கிடையாது. பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த கருத்துகள் எடுத்து சொல்லப்பட்டு உள்ளது. இதில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது.
தனியார் கல்லூரிகளுக்கோ, நிகர்நிலை பல்கலைகழகத்துக்கோ விதிவிலக்கை நாம் கேட்கவில்லை. அரசு கல்லூரிகளுக்கு மட்டுமே கோருகிறோம். அரசாங்க கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் உள்ள அரசு இடங்களுக்கு மட்டும்தான் விலக்கு கோரி வருகிறோம்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமான மருத்துவ இடங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள இடங்களை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதற்காக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கிராமப்புற மாணவர்களுக்கு உறுதிபடுத்தப்பட வேண்டும்.
யாரை எல்லாம் சந்தித்து அழுத்தம் தரவேண்டுமோ அவர்களை பலமுறை சந்தித்து அழுத்தம் தந்து உள்ளோம். தமிழக அரசின் சார்பில் பல கருத்துகள் எடுத்து சொல்லப்பட்டது. கூடுதல் விவரங்களையும் வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.