இரு அணிகள் இணைப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

இரு அணிகள் இணைப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2017-08-03 22:45 GMT
சென்னை

முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

கேள்வி:– அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளாரே?

பதில்:– அவர்கள் அணியில் இருந்து இதுதொடர்பாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் எங்களுக்கு வரவில்லை. அவர்களாகவே கேள்விகளை கேட்டு, அவர்களாகவே பதில்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

கேள்வி:– தகவல் வந்தால் இணைப்புக்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா?

பதில்:– ஏற்கனவே எங்களது முடிவை சொல்லிவிட்டேன்.

கேள்வி:– எடப்பாடி தலைமையிலான அரசு ஊழல் அரசு என மைத்ரேயன் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளாரே?

பதில்:– தமிழக மக்களின் கருத்தும் அதுவாகத்தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்