அன்னிய செலாவணி மோசடி: சசிகலா உறவினர் பாஸ்கரன் மீதான வழக்கில் குறுக்கு விசாரணை தொடங்கியது
சசிகலா உறவினர் பாஸ்கரன் மீது தொடரப்பட்ட அன்னிய செலாவணி மோசடி வழக்கில் நேற்று குறுக்கு விசாரணை தொடங்கியது.;
சென்னை,
ஜெ.ஜெ. டி.வி.க்கு ஒளிபரப்பு கருவிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததில் அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளதாக சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன், பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கப்பிரிவினர் 4 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் நடந்துவருகிறது. இந்த வழக்கில் சசிகலா உள்பட 4 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அரசு தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதற்காக வழக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜாகீர்உசேன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் மீதான வழக்கில் மட்டும் அரசு தரப்பு சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய தயாராக இருப்பதாக சசிகலா மற்றும் பாஸ்கரன் தரப்பு வக்கீல் தெரிவித்தார். இதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து, பாஸ்கரன் மீதான வழக்கில் குறுக்கு விசாரணை தொடங்கியது. அரசு தரப்பு சாட்சியான அமலாக்கத்துறை அதிகாரி பாமா புவனேசுவரி கோர்ட்டில் ஆஜராகி இருந்தார்.
அவரிடம் சசிகலா தரப்பு வக்கீல், இந்த வழக்கு விசாரணையில் உங்களது பங்களிப்பு என்ன?, அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளது என்பதை எதன் மூலம் உறுதி செய்தீர்கள், அதுதொடர்பான ஆவணங்கள் எங்கிருந்து கைப்பற்றப்பட்டன? என பல்வேறு கேள்விகளை கேட்டார். அதற்கு அமலாக்கத்துறை அதிகாரி பதில் அளித்தார்.
பின்னர் வழக்கு விசாரணை 26-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.