தீபாவளி பண்டிகைக்கான ரெயில் டிக்கெட்டுகள்: முன்பதிவு துவங்கிய ஐந்தே நிமிடங்களில் விற்று தீர்ந்தன

தீபாவளி பண்டிகைக்கான ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று முதல் துவங்கியது.

Update: 2017-06-18 06:41 GMT
சென்னை, 

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 18-ந்தேதி (புதன்கிழமை) வருகிறது. சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள் தீபாவளி அன்று சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். தற்போது ரெயில்களில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாம்.

அதன்படி தீபாவளி பண்டிகைக்கான ரெயில் முன்பதிவு இன்று தொடங்கியது. அக்டோபர் 16-ந்தேதிக்கான ரெயில் முன்பதிவு டிக்கெட்டுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்காக சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிகாலையிலேயே பயணிகள் குவிந்து இருந்தனர்.8 மணிக்கு கவுண்டர்கள் திறந்ததும் பயணிகள் முன் பதிவு செய்து டிக்கெட்டுகள் பெற்றுக் கொண்டனர். நெல்லை, கன்னியாகுமரி, பொதிகை ரெயில்களில் டிக்கெட்டுகள் ஐந்தே நிமிடத்தில் விற்று தீர்ந்தன.

மேலும் நாளை அக்டோபர் 17-ம் தேதிக்கான முன்பதிவு, நாளை மறுநாள் அக்டோபர் 18-ம் தேதிக்கான முன்பதிவு துவங்க உள்ளது. தீபாவளி டிக்கெட்டுகளை ஆன்லைன் கம்ப்யூட்டர் மூலம் பெரும்பாலானோர் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் ரெயில் கவுண்டர்களில் காத்திருந்த பலருக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என கவுண்டர்களில் காத்திருந்த பயணிகள் புகார் கூறினர்.

மேலும் செய்திகள்