ராகுல் காந்தி உத்தரவுப்படி தமிழகத்தில் 72 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம்

தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் 72 பேர் அதிரடியாக மாற்றப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.;

Update: 2017-06-10 20:44 GMT

சென்னை,

பெரம்பலூர் மாவட்ட தலைவராக டி.தமிழ்ச்செல்வன், அரியலூர் மாவட்ட தலைவராக ஜி.ராஜேந்திரன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவராக முருகேசன், புதுக்கோட்டை தெற்கு தலைவராக தர்ம தங்கவேலனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம்

தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு, அந்த பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பிறப்பித்து உள்ளார்.

இதில் தென்சென்னை மாவட்ட தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் மீண்டும் அதே பொறுப்புக்கு தேர்வாகி இருக்கிறார். வட சென்னை மாவட்டத்திற்கு எம்.எஸ்.திரவியம் நியமிக்கப்பட்டு உள்ளார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் விவரம் வருமாறு:–

சென்னை

சென்னை வடக்கு – எம்.எஸ்.திரவியம், சென்னை தெற்கு – கராத்தே ஆர்.தியாகராஜன், சென்னை கிழக்கு – சிவராஜசேகரன், சென்னை மேற்கு – வீர பாண்டியன், திருவள்ளூர் வடக்கு – ஏ.ஜி.சிதம்பரம், திருவள்ளூர் மத்தியம் – மகேந்திரன், திருவள்ளூர் தெற்கு – பி.ஜேம்ஸ், காஞ்சீபுரம் வடக்கு – ரூபி மனோகரன், காஞ்சீபுரம் தெற்கு – ஆர்.சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் மேற்கு – காஞ்சீ ஜி.வி.மதியழகன், வேலூர் கிழக்கு – சி.பஞ்சாட்சரம், வேலூர் மேற்கு – எஸ்.பிரபு, வேலூர் மத்தியம் – ஜே.ஜோதி, வேலூர் மாநகராட்சி – பி.டீக்காராமன், கிருஷ்ணகிரி கிழக்கு – சுப்ரமணியன், கிருஷ்ணகிரி மேற்கு – எஸ்.ஏ.முரளிதரன், தர்மபுரி – கோவி சிற்றரசு, திருவண்ணாமலை வடக்கு – வி.பி.அண்ணாமலை, திருவண்ணாமலை தெற்கு – செங்கம் ஜி.குமார்,

விழுப்புரம்

விழுப்புரம் வடக்கு – ஆர்.பி.ரமேஷ், விழுப்புரம் மத்தியம் – ஸ்ரீனிவாச குமார், விழுப்புரம் தெற்கு – ஜெயகணேஷ், சேலம் மாநகராட்சி – ஜி.ஜெயபிரகாஷ், சேலம் கிழக்கு – எஸ்.கே.அர்த்தநாரி, சேலம் மேற்கு – ஏ.என்.முருகன், நாமக்கல் மேற்கு – பி.டி.தனகோபால், நாமக்கல் கிழக்கு – கே.எம்.ஷேக் நவீத், ஈரோடு வடக்கு – எஸ்.வி.சரவணன், ஈரோடு தெற்கு – மக்கள் ராஜன், ஈரோடு மாநகராட்சி – ஈ.பி.ரவி, திருப்பூர் மாநகராட்சி – ஆர்.கிருஷ்ணன், திருப்பூர் வடக்கு – பி.கோபி, திருப்பூர் தெற்கு – ஜி.தென்னரசு, நீலகிரி – ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ.,

கோவை

கோவை மாநகராட்சி – மயூரா ஜெயக்குமார், கோவை வடக்கு – வி.எம்.சி.மனோகரன், கோவை தெற்கு – எம்.பி.சக்திவேல், திண்டுக்கல் மாநகராட்சி – சொக்கலிங்கம், திண்டுக்கல் கிழக்கு – அப்துல் கனி ராஜா, திண்டுக்கல் மேற்கு – ஆர்.சிவசக்திவேல் கவுண்டர், கரூர் – சின்னச்சாமி, திருச்சி மாநகரம் – ஜே.ஜவஹர், திருச்சி வடக்கு – ஆர்.கலைச்செல்வன், திருச்சி தெற்கு – கோவிந்தராஜன், பெரம்பலூர் – டி.தமிழ்ச்செல்வன், அரியலூர் – ஜி.ராஜேந்திரன், கடலூர் வடக்கு – முத்தாண்டி குப்பம் ஆர்.ராதாகிருஷ்ணன், கடலூர் தெற்கு – எம்.என்.விஜயசுந்தரம், நாகை வடக்கு – எஸ்.ராஜ்குமார், நாகை தெற்கு – ஜி.கனகராஜ், திருவாரூர் – எஸ்.எம்.பி.துரைவேலன், தஞ்சை மாநகராட்சி – பி.ஜி.ராஜேந்திரன்,

தஞ்சை

தஞ்சை வடக்கு – டி.ஆர்.லோகநாதன், தஞ்சை தெற்கு – டி.கிருஷ்ணசாமி வாண்டையார், புதுக்கோட்டை வடக்கு – முருகேசன், புதுக்கோட்டை தெற்கு – தர்ம தங்கவேலன், சிவகங்கை – சத்யமூர்த்தி, மதுரை மாநகராட்சி – வி.கார்த்திகேயன், மதுரை வடக்கு – டி.ரவிச்சந்திரன், மதுரை தெற்கு – ஆர்.ஜெயராமன், தேனி – கூடலூர் எம்.பி.முருகேசன், விருதுநகர் மேற்கு – தளவாய் பாண்டியன், விருதுநகர் கிழக்கு – ராஜ சொக்கர், ராமநாதபுரம் – எம்.தெய்வேந்திரன்,

நெல்லை

தூத்துக்குடி மாநகராட்சி – சி.எஸ்.முரளிதரன், தூத்துக்குடி வடக்கு – ஸ்ரீனிவாசன், தூத்துக்குடி தெற்கு – பி.ஜெயக்குமார், நெல்லை மாநகராட்சி – சங்கர பாண்டியன், நெல்லை கிழக்கு – என்.கே.வி.சிவகுமார், நெல்லை மேற்கு – பழனி நாடார், கன்னியாகுமரி கிழக்கு – ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மேற்கு – ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.,

மேற்கண்ட தகவலை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தனன் திவிவேதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்