விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்றி வருகிறது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்பொழுது, விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்றி வருகிறது என கூறியுள்ளார்.;

Update: 2017-06-10 13:49 GMT
கோவை,

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவச அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு மணல் குவாரிகளை அமைத்து மக்களுக்கு குறைந்த விலையில் மணல் வழங்கி வருகிறது.  அணைகள், குளம், ஏரிகளில் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

அவர் தொடர்ந்து, வர்த்தகர்களை பாதிக்காத வகையில் ஜி.எஸ்.டி.யை நிறைவேற்ற வலியுறுத்தப்படும்.  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  தமிழக அரசு சிறப்புடன் ஆட்சி செய்கிறது.  எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க வாய்ப்பில்லை என கூறினார்.

உட்கட்சி விவகாரம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது.  அதனை நாங்களே பேசி தீர்த்து கொள்வோம் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்