பல ஆண்டுகாலமாக பணியாற்றிய தி.மு.க. மாணவர் அணி செயலாளர் புகழேந்தி பொறுப்பில் இருந்து விடுவிப்பு

தி.மு.க. மாணவரணி செயலாளராக கடலூர் இள.புகழேந்தி (வயது 61) பல ஆண்டு காலமாக இருந்து வந்தார்.;

Update: 2017-06-08 21:56 GMT

சென்னை,

அவரிடம் இருந்து தி.மு.க. மாணவரணி பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. மாணவரணி புதிய செயலாளராக தற்போது மாநில துணை செயலாளராக இருக்கும் சி.வி.எம்.பி.எழிலரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

தி.மு.க. மாணவர் அணி செயலாளராக இருக்கும் கடலூர் இள.புகழேந்தி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக மாணவர் அணி துணை செயலாளராக பணியாற்றி வரும் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமை கழகத்தால் தி.மு.க. மாணவர் அணி செயலாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர் இணைந்து பணியாற்றுவார்.

தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளராக இள.புகழேந்தி நியமிக்கப்படுகிறார். தி.மு.க. விவசாய அணி இணைச்செயலாளராக நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆர்.அருட்செல்வன் நியமிக்கப்படுகிறார்.  இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்