கருணாநிதியுடன், ராகுல் காந்தி சந்திப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. வரவேற்றனர்
தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்து ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டபேரவை வைர விழா மற்றும் 94–வது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பீகார் மாநில முதல்–மந்திரி நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்–மந்திரி நாராயணசாமி, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்–மந்திரி உமர் அப்துல்லா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழா நிறைவடைந்ததும், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ராகுல் காந்தி தங்கினார். தமிழக சுற்றுப்பயணத்தின் 2–வது நாளான நேற்று, அவர் தங்கியிருந்த ஓட்டலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு என்னென்ன பணிகளை செய்ய வேண்டும்? என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
கோபாலபுரம் வருகை
பிறந்த நாள் விழா மற்றும் சட்டபேரவை வைர விழாவில் உடல்நலக்குறைவு காரணமாக கருணாநிதி பங்கேற்கவில்லை. இதனால் அவரை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க, ராகுல் காந்தி விரும்பினார். இதையடுத்து சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்ட ராகுல்காந்தி, சரியாக 12 மணி அளவில் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு வந்தார்.
அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்பட முக்கிய நிர்வாகிகளும் உடன் வந்திருந்தனர்.
நேரில் வாழ்த்து
கருணாநிதியை சந்திக்க வந்த ராகுல் காந்தியை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் வாசலில் வந்து அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். கருணாநிதிக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துவிட்டு, உடல் நலம் குறித்தும் அவரிடம் ராகுல்காந்தி விசாரித்தார்.
இதேபோல மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடமும் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தார். இந்த சந்திப்பு 25 நிமிடம் நடைபெற்றது. இதையடுத்து சரியாக 12.27 மணி அளவில் ராகுல்காந்தி வெளியே வந்தார். பின்னர் அங்கிருந்து காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு புறப்பட்டு சென்றார்.
முதன் முறையாக இல்லத்தில்...
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது ராகுல்காந்தி அவரை நலம் விசாரிப்பதற்காக சென்னை வந்திருந்தார். அதற்கு பின்னர் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் கருணாநிதியை முதன் முறையாக ராகுல் காந்தி நேற்று சந்தித்துள்ளார்.
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. ஆகியோர் கருணாநிதியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததோடு, உடல்நலம் குறித்தும் விசாரித்தனர்.
கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்து விட்டு வந்த ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மகிழ்ச்சி
தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை நேரில் தெரிவித்ததை பெருமையாக கருதுகிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியின் வாழ்த்து செய்தியையும் அவரிடம் தெரிவித்தேன். அவரது உடல் நலம் தேர்ச்சியடைந்து வருவது சந்தோசமாக இருக்கிறது. மீண்டும் அவர் 100 சதவீத உடல் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.
காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசு தவறான அணுகுமுறையை கையாண்டு வருகிறது. தேசிய புலனாய்வு அமைப்பு பல்வேறு சோதனைகளை நடத்துகிறது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 6 மாதங்களுக்கு முன்பு, நிதி மந்திரி அருண்ஜெட்லியிடம் நான் பேசினேன். ஆனாலும் மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அரசியல் ஆதாயத்துக்காக அவர்கள் எடுக்கும் முடிவு தவறாக உள்ளது. இப்படியே சென்றால் ஒரு கட்டத்தில் காஷ்மீரே எரிந்து விடும். காஷ்மீர் இந்தியாவின் பலம் மிக்க மாநிலமாகும். அங்கு எடுக்கும் முடிவுகள் வலு சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.