சட்டப்பேரவை வைர விழா கொண்டாடும் கருணாநிதிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
94-வது பிறந்தநாள் மற்றும் சட்டப்பேரவை வைர விழா கொண்டாடும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி பிறந்தநாள் விழா
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழாவும், சட்டப்பேரவை வைர விழாவும் சென்னையில் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழாவும், சட்டப்பேரவை வைர விழாவும் நாளை (இன்று) கொண்டாடப்படுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகிறேன். 94-வது பிறந்த நாள் காணும் நண்பர் கருணாநிதிக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கருணாநிதிக்கும், எனக்கும் அரசியல் ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு. தமிழகத்தின் நலனுக்காக செய்யத்தக்கவையை செய்யாமைக்காகவும், செய்யத்தக்க அல்லாதவற்றை செய்தமைக்காகவும் கருணாநிதியை நான் பலமுறை உரிமையுடன் விமர்சித்திருக்கிறேன். அந்த விமர்சனங்களை கருணாநிதி ரசித்து இருக்கிறாரே தவிர, ஒருபோதும் வெறுத்தது கிடையாது. அதே நேரத்தில் தமிழகத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டதில் பெரியார், அண்ணா ஆகியோரின் வழியின் கருணாநிதி செய்த பங்களிப்பை ஒருபோதும் நான் மறுத்ததில்லை, அதை எவரும் மறுக்கவும் முடியாது.
தமிழகத்தைக் கடந்து அகில இந்திய அரசியலிலும், கருணாநிதி தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். பொது வாழ்வில் 80 ஆண்டுகளைக் கடப்பதும், சட்டப்பேரவை உறுப்பினராக வைரவிழா காண்பதும் பெரும் பேறு. அப்பேறு நண்பர் கருணாநிதிக்கு கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. பொது வாழ்வில் நூற்றாண்டை கடந்தும் அவர் சேவையாற்ற வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.
ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-
திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்து, தமிழகத்தின் தலைநகருக்கு வந்து, பெரியாரின் தத்துவங்களை உள்வாங்கி, அண்ணாவிடம் அரசியல் பயின்று, தமிழக முதல்-அமைச்சராக அமர்ந்து, தமிழக மக்களின் நலன் காத்து, தேசியத் தலைவர்கள் அனைவராலும் மதிக்கப்படும் நிலைக்கு உயர்ந்து நிற்பவர் தான் தமிழக சட்டப்பேரவையின் வைர விழா நாயகர் தகைமை சால் கருணாநிதி.
சாதாரண மனிதனாக வாழ்வைத் தொடங்கி சாதனை நாயகனாக உயர்ந்து நிற்கும் வைர விழா நாயகர் கருணாநிதியின் சீர்மிகு பணி தொடர வேண்டும், மேலும் உயர்ந்து சிறக்க வேண்டும். வைர விழா நாயகரே, வாழ்க நூறாண்டு. தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்தின் சார்பாக என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி அகவை 94-ல் அடியெடுத்து வைக்கும் நாளில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பெரு மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறது. சமூகத்தில் மண்டிக்கிடந்த மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரான சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, பகுத்தறிவுப் போராட்டத்தில் இணைந்து, அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளை துல்லியமாக மதிப்பீடு செய்து தொடர்ந்து வெற்றிபெற்ற மகத்தான ஆளுமையின் அடையாளம் கருணாநிதி.
அண்மைக்கால அரசியல் நிகழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள முடியாத இடைவெளியை வென்று, கருணாநிதி நல்ல உடல்நலத்துடன் மேலும் பல்லாண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்திட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வாழ்த்துகிறோம்.
கி.வீரமணி
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-
மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னைப் பற்றிய ஒரு வரி விமர்சித்துக்கொண்ட திராவிடர் இயக்கத் திண்தோள் வீரர், வித்தகர், நம்முத்தமிழ் அறிஞர் கருணாநிதி 3-6-2017 அன்று (இன்று) 94-ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறார். அவர் வகுத்திட்ட வியூகங்களும், தயாரித்த அரசியல் படைக்கலன்களும், நடத்திட்ட போராட்டங்களும், துணிச்சலின் துள்ளல் மட்டுமல்ல, தொய்வில்லா தொடர் பணிகள் ஆகும்.
முன்பு எப்போதும் தேவைப்பட்டதுபோல், இப்போது இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. நாம் செயல்பட ஆயத்தமாக வேண்டும். செய்ய நினைப்பதை, செய்து முடிப்போம் என்ற சூளுரையை மேற்கொள்வோம். நம் லட்சியப் பயணங்கள் முடிவதில்லை. வாழ்க பெரியார். வாழ்க அண்ணா. வாழ்க கலைஞர்.
ஏ.சி.சண்முகம்
புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம்:-
தமிழக, இந்திய அரசியல் வரலாற்றில் தொடர்ந்து 60 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிக் கொண்டிருக்கும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியின் சாதனை மிகவும் அளப்பரியதாகும். சட்டமன்ற உறுப்பினராக பணியாற்ற துவங்கியதின் வைர விழா அவரது பிறந்த நாளில் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட விருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.
ஆட்சி நிர்வாகத்தில் மிகவும் திறமையானவர், எத்தகு சூழ்நிலையையும் சமாளிக்கும் அறிவாற்றல் மிக்கவர் இவரது செயல்பாடுகளை வேறு எவரோடும் ஒப்பிட முடியாது. தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் இதயங்களில் இவருக்கென்று எப்போதும் ஓர் இடமுண்டு.
அப்படிப்பட்ட மூத்த தமிழ் தலைவர் கருணாநிதிக்கு வைர விழா கொண்டாடப்படுவது தமிழ் பேசும் நல்இதயங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. கருணாநிதி இந்த வைர விழாவைத் தொடர்ந்து நூற்றாண்டு பிறந்த நாள் விழா காண வேண்டும் என்று புதிய நீதிக்கட்சியின் சார்பில் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோரும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
என்.ஆர்.தனபாலன்
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-
தனது 14-வது வயது முதல் தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கையால் ஈர்க்கப்பட்டு திராவிட கழகத்தில் அண்ணாவோடு இணைந்து செயல்பட்ட தலைவர் கருணாநிதி 94-வது பிறந்தநாள் காணும் நன்நாளில் இந்திய அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்த்துகளோடு இணைந்து நானும் வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தொடர்ச்சியாக 60 ஆண்டுகள் சட்டமன்றத்தை அலங்கரித்த கருணாநிதியால் தான் இன்றளவும் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அது மிகையாகாது. சட்டமன்றத்தில் வைர விழா கொண்டாடும் தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளில் இந்தியாவின் தலை சிறந்த அரசியல் தலைவர்களின் வாழ்த்துகளோடு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் நானும் வாழ்த்தி போற்றுகிறேன்.