மீண்டும் சட்டசபை தேர்தல் வந்தால் ஜெயலலிதாவின் ஆட்சி மலரும் பன்னீர் செல்வம் பேச்சு

மீண்டும் சட்டசபை தேர்தல் வந்தால் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி மலரும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2017-06-01 15:54 GMT
நாகை,

நாகை பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:

ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க தமிழக அரசு தவறிவிட்டது. கட்சி நிர்வாகிகளை வைத்துக்கொண்டு கட்சியையும், ஆட்சியையும் நடத்திவிடலாம் என தப்புக்கணக்கு போடுகிறார்கள். மீண்டும் சட்டசபை தேர்தல் வந்தால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி மலரும். உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள். அதிமுக இரு அணிகளாக பிரிந்துவிட்டதால், ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என கனவு காண்கிறார், அது பலிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்