விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தோம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தோம் என்று சென்னை விமானநிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.;

Update:2017-04-24 00:11 IST
சென்னை,

புதுடெல்லி ராஷ்டிரபதி பவனில் நிதி ஆயோக்கின் 3வது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடியது.  இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்.  தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இதில் கலந்து கொண்டார்.நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம்.  விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

தமிழக விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு பிரதமரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.  நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.  தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது பற்றியும் பேசியுள்ளோம் என கூறினார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  செய்தியார்களிடம் கூறியதாவது:

டெல்லியில் போராடிய விவசாயிகளின் மனுவை பிரதமரிடம் கொடுத்தேன். நீட்தேர்வு விலக்கு. மீனவர் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளையும் வைத்தோம்.  விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்