”3 மணி நேரம் ஆலோசனைக்கு பிறகு”கூவத்தூரில் இருந்து சென்னை புறப்பட்டார் சசிகலா

எம்.எல்.ஏக்களுடன் 3 மணி நேரம் ஆலோசனைக்கு பிறகு கூவத்தூரில் இருந்து சசிகலா சென்னை புறப்பட்டு சென்றார்.;

Update:2017-02-11 19:48 IST
சென்னை,

கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளனர்.  அவர்களை சந்திப்பதற்காக அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா கூவத்தூர் சென்றார். அங்கு தனது ஆதரவு  எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். சுமார் 3 மணி நேரம் எம்.எல்.ஏக்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் சசிகலா சென்னை புறப்பட்டார். மேலும் கவர்னரிடம் இருந்து அழைப்பு எதுவும் வராததால் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து நட்சத்திர விடுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்