ஜல்லிக்கட்டு நடத்த போலீஸ் தடை விதித்ததால் நடிகர் ஜி.வி. பிரகாஷ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இன்று ஜல்லிக்கட்டு நடத்த போலீஸ் தடை விதித்ததால் நடிகர் ஜி.வி. பிரகாஷ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி, குட்டிக்கரடு என்ற இடத்தில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டன.
இதற்காக நேற்று இரவோடு இரவாக அந்த பகுதியில் உள்ள மைதானம் சமன் செய்யப்பட்டு காளைகளும் கொண்டுவரப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டுக்கு நடிகரும், இசை அமைப் பாளருமான ஜி.வி. பிரகாஷ் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் ஜல்லிக்கட்டுக்காக கொண்டுவரப்பட்ட காளைகளை மீட்டனர். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அவர்களிடம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என்று கூறினார்கள்.
இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி நடிகர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடல் ஆசிரியர் அருண் கார்த்திக் காமராஜ் மற்றும் டைரக்டர் சண்முகம், உதவி இயக்குனர் கவுசிகபாண்டியன் ஆகியோர் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 2 மணி நேரம் கழித்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தடையை