கிருஷ்ணா நதி நீர் பங்கீடு முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆந்திர முதல்வருடன் சந்திப்பு

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆந்திர பிரதேசத்திற்கு சென்ற தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்துள்ளார்.

Update: 2017-01-12 10:29 GMT
சென்னை,

அவருடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் கிரிஜா ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆந்திராவுக்கு புறப்பட்டு சென்றார்.  அவர் விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று சந்தித்துள்ளார்.  கிருஷ்ணா நதி நீர் பங்கீடு பற்றி அவர் ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மேலும் செய்திகள்