குப்பைகளை தரம்பிரித்து கொடுக்க பொதுமக்களுக்கு 200 குப்பை தொட்டிகள்
குப்பைகளை தரம்பிரித்து கொடுக்க பொதுமக்களுக்கு 200 குப்பை தொட்டிகளை கமிஷனர் வழங்கினார்.;
வேலூர் மாநகராட்சியில் குப்பையை தரம் பிரித்து கொடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சத்துவாச்சாரி வ.உ.சி.நகரில் உள்ள பொதுமக்களுக்கு குப்பையை தரம் பிரித்து கொடுப்பதற்காக குப்பை தொட்டி வழங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் 200 பேருக்கு குப்பை தொட்டிகளை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் தினேஷ்சரவணன் செய்திருந்தார்.