வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் தொந்தரவு
அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேகரன் (வயது 52). இவர் தள்ளு வண்டியில் கோழி கடை போட்டு வியாபாரம் நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 13.3.2022 அன்று 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரனை கைது செய்தனர்.
20 ஆண்டு சிறை
இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக தமிழக அரசு ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்து நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.