ஏலகிரி மலைப்பாதையில் மினி லாரி கவிழ்ந்து கல்லூரி மாணவிகள் உள்பட 20 பேர் படுகாயம்

ஏலகிரி மலைப்பாதையில் பிரேக் பிடிக்காமல் நிலைதடுமாறி ஓடிய மினி லாரி தடுப்பு சுவரில் மேைாதி கவிழ்ந்ததில் லிப்ட் கேட்டு பயணம் செய்த கல்லூரி மாணவிகள் 9 பேர் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-09-27 18:40 GMT

ஜோலார்பேட்டை

ஏலகிரி மலைப்பாதையில் பிரேக் பிடிக்காமல் நிலைதடுமாறி ஓடிய மினி லாரி தடுப்பு சுவரில் மேைாதி கவிழ்ந்ததில் லிப்ட் கேட்டு பயணம் செய்த கல்லூரி மாணவிகள் 9 பேர் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

சுற்றுலா

திருப்பத்தூரை அடுத்த பெரியகுளம் அருகே உள்ள தனியார் செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த 28 மாணவிகள் நேற்று ஏலகிரி மலைக்கு அரசு பஸ்சில் சென்றனர். அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர்கள் மாலை சுற்றுலாவை முடித்துக் கொண்டு மீண்டும் திருப்பத்தூருக்கு திரும்புவதற்காக பஸ்சுக்கு காத்து நின்றனர்.

அப்போது திருப்பத்தூருக்கு வந்த பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் திணறிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வேப்பூர் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் மினி லாரியில் டைல்ஸ் ஏற்றிக்கொண்டு வந்தார்.

ஏலகிரி மலையில் டைல்ஸ் முழுவதையும் இறக்கிவிட்டு காலியாக வந்த பொழுது 4 கட்டிட தொழிலாளிகள் 'லிப்ட்' கேட்டுள்ளனர்.

இதனை பார்த்த கல்லூரி மாணவிகளும் தங்களுக்கும் 'லிப்ட்' கொடுக்கும்படி கேட்டதால் அனைவரையும் டிரைவர் சிலம்பரசன் தன்னுடைய வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மயைிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தார்.

கவிழ்ந்து விபத்து

ஏலகிரி மலையின் 3-வது கொண்டை ஊசி வளைவான திருவள்ளுவர் வளைவில் வாகனத்தின் பிரேக் செயலிழந்து போனதால் நிலை தடுமாறி ஓடிய மினி லாரி மலைப்பாதையின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் கீதா (வயது 19), சத்யா (18), காளியம்மாள் (18), தனலட்சுமி (19), காவியா (17), அகல்யா (17), கவுதமி (17), பிரியா (18), மாரியம்மாள் (18), கல்லூரி பேராசிரியை புவனேஸ்வரி (வயது 45) மற்றும் மினி லாரி டிரைவர் சிலம்பரசன் (31), காளியம்மாள் (35), இன்னொரு காளியம்மாள் (55), சத்யா (18), கணேசன் (60) உள்பட 20- க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்

இவர்களில் 6 பேரை அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காயம் அடைந்த மற்ற அனைவரும் சற்று நேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

மேல் சிகிச்சை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் கணேசன், சரசுபாய், பிரபாவதி, ரேவதி, காளியம்மாள் மற்றொரு காளியம்மாள் ஆகிய 6 பேரும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து ஏலகிரி மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்வாகனன் மற்றும் போலீசார் வழக்குழு்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்