புவனகிரியில் கவர்னர் உருவபொம்மையை எரிக்க முயற்சி 20 பேர் கைது

புவனகிரியில் கவர்னர் உருவபொம்மையை எரிக்க முயன்ற 20 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-01-10 20:20 GMT

புவனகிரி

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நேற்று புவனகிரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கடலூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் மித்ரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் மாணிக் முருகேஷ், மாணவரணி செயலாளர் பெரியார் சக்தி, புவனகிரி நகர செயலாளர் ஸ்ரீதர், கீரப்பாளையம் ஒன்றிய துணை செயலாளர் பாபு, ஒன்றிய துணை தலைவர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென அவரது உருவ பொம்மையை எடுத்து வந்து தீ வைத்து எரிக்க முயன்றனர். இதை பார்த்த சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, உருவபொம்மையை கைப்பற்றி அப்புறப்படுத்தினார்கள்.

பின்னர், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, 20 பேரை கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக, அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்