வனவிலங்குகளை வேட்டையாடிய 20 பேர் கைது
வனவிலங்குகளை வேட்டையாடிய 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கருத்தலக்கம்பட்டி மற்றும் புதூர் கிராமங்களை சேர்ந்தவர்கள் கோவில் திருவிழாவின் போது படையலுக்காக விருதுநகர் அருகே 30 முயல்கள், 5 கீரிகளை வேட்டையாடிவிட்டு ஊருக்கு திரும்பும் போது வனத்துறையிடம் பிடிபட்டனர். இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வீரணன் உட்பட 20 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.