தூய்மை அருணை இயக்கம் சார்பில் 20 பேட்டரி வாகனங்கள்-டாக்டர் எ.வ.வே. கம்பன் வழங்கினார்
தூய்மை அருணை இயக்கம் சார்பில் 20 பேட்டரி வாகனங்களை டாக்டர் எ.வ.வே.கம்பன் வழங்கினார்.
தூய்மை அருணை இயக்கம் சார்பில் 20 பேட்டரி வாகனங்களை டாக்டர் எ.வ.வே.கம்பன் வழங்கினார்.
திருவண்ணாமலையில் தூய்மை அருணை அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் அமைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு செயல்பட்டு வருகிறார். தூய்மை அருணை அமைப்பின் சார்பில் திருவண்ணாமலை நகரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஆன்மிக நகரமான திருவண்ணாமலை, தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் 39 வார்டுகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூய்மை அருைண அமைப்பின் சார்பில் வீடுகளில் 'மக்கும் குப்பை மக்கா குப்பை' என தனித்தனியாக பிரித்து சேகரிக்க 20 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு பணியாளர்களையும் தூய்மை அருணை அமைப்பே நியமித்துள்ளது.
அதன்படி குப்பை சேகரிப்பு வாகனங்கள் மற்றும் பணியாளர்களை திருவண்ணாமலையின் நகராட்சி பணிக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளரும் மாநில மருத்துவ அணி துணைத் தலைவருமான டாக்டர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு புதிய குப்பை சேகரிப்பு வாகனங்களை நகராட்சிக்கு வழங்கி ஓட்டுனர்களுக்கு வாகன சாவியை ஒப்படைத்து வாழ்த்தினார்.
இதே போல திருவண்ணாமலை நகராட்சி சார்பில் குப்பை சேகரிக்க 5 டெம்போ வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது இதனையும் டாக்டர் கம்பன் இயக்கி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஸ்ரீதரன் ப.கார்த்தி வேல்மாறன் பிரியா விஜய ரங்கன், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி மற்றும் பொறியாளர் அணி அமைப்பாளர் சி.ராம்காந்த், குட்டி புகழேந்தி, ஷெரீப்,ஏ ஏ ஆறுமுகம் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.