அரிவாளுடன் 2 வாலிபர்கள் சிக்கினர்

தங்கும் விடுதியில் அரிவாளுடன் 2 வாலிபர்கள் சிக்கினர்.

Update: 2023-07-31 18:46 GMT

நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் உத்தரவின்பேரில் நெல்லை சந்திப்பு உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் மேற்பார்வையில் சந்திப்பு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சந்திப்பு பகுதியில் உள்ள விடுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு விடுதியில் சந்தேகப்படும்படியாக தங்கி இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் நெல்லை அருகே தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்த உடையார் (வயது 26), மேலப்பாட்டத்தை சேர்ந்த சங்கர் (28) ஆகியோர் என்பதும், அவர்கள் பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வந்த காரை சோதனை செய்த போது அதில் ஒரு அரிவாள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சந்திப்பு போலீசார் உடையார், சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்