குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் 2 கைது செய்யப்பட்டனர்.
அணைக்கட்டு தாலுகா விரிஞ்சிபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சுதாகர் (வயது 29), அஜித்குமார் (20). இவர்கள் இருவரையும் கடந்த மாதம் வழிப்பறி வழக்கில் விரிஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் கைது செய்து வேலூர் மத்திய ஜெயில் அடைத்தனர்.
சுதாகர், அஜித்குமார் மீது பல்வேறு குற்ற வழக்குகள் போலீஸ் நிலையங்களில் உள்ளன. இருவரும் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அதற்கான ஆணையின் நகலை போலீசார் ஜெயில் அதிகாரிகளிடம் வழங்கினர்.