மதுக்கடையில் பாட்டில்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது
வாலாஜா அருகே மதுக்கடையில் பாட்டில்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;
வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் பழைய திருத்தணி ரோட்டில் உள்ள அரசு மதுபான கடையில் கடந்த 29-ந் தேதி இரவு பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கடை மேற்பைர்வையாளர் வாலாஜா போலீசில் புகார் செய்தார். இந்தநிலையில் வாலாஜாபேட்டை படவேட்டம்மன் கோவில் அருகே உள்ள சந்திப்பில் வாலாஜா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களிடம் 24 அரசு மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆற்காடு அடுத்த தாழனூர் பகுதியைச் சேர்ந்த டில்லி பாபு (வயது 22), ஹேமந்த் குமார் (20) என்பதும், வி.சி. மோட்டூர் மதுபான கடையில் திருடியதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.