கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-06-04 03:43 IST

தக்கலை:

குமாரபுரத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தக்கலை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து நேற்று முன்தினம் தக்கலை இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பாலமுருகன், கொற்றிகோடு சப்-இன்ஸ்பெக்டர் வல்சலம் ஆகியோர் குமாரபுரம் அரசு பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாணையில், குமாரபுரம் அருகே படப்பக்குளம் பகுதியை சேர்ந்த ஜெனித்(வயது 24), அருண்(22) என்பது தெரியவந்தது. மேலும், அவர்களை சோதனை செய்தபோது ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ரூ.10 ஆயிரத்து 420 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்