தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-08-24 18:58 GMT

பெருங்குடி அருகே வன்னியம்பட்டி ஊராட்சி வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிலவேந்திரன் (வயது 50). தொழிலாளி, இவர் தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கல்லாலங்குடியை சேர்ந்த ரஞ்சித் (25), ஆலங்குடி வம்பன் காலனியை சேர்ந்த சரண் (18) ஆகியோர் மது போதையில் பிலவேந்திரனிடம் புகையிலை பொருட்கள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித், சரண் ஆகிய 2 பேரும் சேர்ந்து பிலவேந்திரனை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பிலவேந்திரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித், சரண் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்