2 வாலிபர்கள் கைது

தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-29 20:00 GMT

பேட்டை:

பேட்டை சத்யாநகர் குடிசை மாற்று வாரியத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 34). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று சத்யாநகர் செல்லும் வழியில் கண்ணன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த மாரிபாண்டி (26), நரசிங்கநல்லூர் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த டேனியல் (26) ஆகிய இருவரும் தட்டிக் கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே மாரிபாண்டி, கண்ணனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கண்ணன் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் வழக்குப்பதிந்து தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாரிபாண்டி, டேனியல் ஆகியோைர கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்