மினிபஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: 2 வாலிபர்கள் கைது

மினிபஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-10-10 19:03 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மினி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் மினிபஸ்சின் இருக்கைகள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிைலயில் மினி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் திசையன்விளையைச் சேர்ந்த சுடலைமாடன் மகன் சூர்யா (வயது 20), அப்புவிளையைச் சேர்ந்த லிங்கேஷ்வரன் (22) ஆகிய 2 பேரை உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்