வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சிலட்டூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விக்னேஸ்வரன் (வயது 29). இவர் தனது மனைவியுடன் கடந்த 2018-ல் கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது, இவரது வீட்டில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை அதே ஊரை சேர்ந்த முருகையா மகன் வீரபாண்டி (23) என்பவர் திருடியதாக அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட வீரபாண்டிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். அதன் பின்னர் வீரபாண்டிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.