தனித்தனி விபத்தில் 2 பெண்கள் பலி

தனித்தனி விபத்தில் 2 பெண்கள் பலியானாா்கள்.;

Update: 2023-04-04 18:45 GMT


விழுப்புரத்தை அடுத்த பிடாகம் பெட்ரோல் நிலையம் அருகில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து திருச்சி நோக்கிச்சென்ற கார் மோதியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்