நகை திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது
நகை திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள பெருமாள் கோவிலில் சாமி கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது 9 பெண்களிடம் 30 பவுன் நகையை திருடிய திருச்சி சமயபுரத்தை சேர்ந்த சாந்தி (வயது 35), முத்து என்பவரின் மனைவி மாரி என்கிற லட்சுமி (37) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டர் பா.முருகேசுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
இதற்கான நகலை வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.