ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருட முயன்ற 2 பெண்கள் கைது

ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருட முயன்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-23 19:48 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழப்பெரம்பலூர் தெற்கு தெருவை சேர்ந்த தனவேலின் மனைவி ஆவரணம் (வயது 46). இவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள நகை அடகு கடையில் வைத்திருந்த நகையை திருப்புவதற்காக நேற்று முன்தினம் காலை ரூ.60 ஆயிரத்தை எடுத்து கொண்டு அரசு பஸ்சில் பயணம் செய்தார். அகரம்சீகூர் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, அதே பஸ்சில் பயணம் செய்த 2 பெண்கள் ஆவரணத்தின் பணத்தை திருட முயன்றனர்.

இதனை கண்ட ஆவரணம் சக பயணிகள் உதவியுடன் அந்த 2 பெண்களையும் கையும், களவுமாக பிடித்து மங்களமேடு போலீசில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டம், காட்பாடி ஜங்ஷன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த முனியாண்டியின் மனைவி ராணி(40), மணியின் மனைவி ஆதி(29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிந்து ராணி, ஆதி ஆகிய 2 பேரை கைது செய்து, குன்னம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்