மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது
சங்கராபுரம் பகுதியில் மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது;
சங்கராபுரம்
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் வடசிறுவள்ளூர், குளத்தூர் ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் அருகில் மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த வடசிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி(வயது 75), குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜோஸ்மின்(36) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 18 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.