தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாநகர மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில்வரியை ரூ.2 ஆயிரம் நோட்டை பயன்படுத்தி செலுத்தலாம். மேலும் 2023-24 -ம் ஆண்டுக்கான 2-வது நிதியாண்டிற்கான சொத்துவரி தொகையினை செலுத்தும் போது 5 சதவீத ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.