பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வந்த 2 டெம்போக்கள் சிறைபிடிப்பு

தக்கலை அருகே பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வந்த 2 டெம்போக்கள் சிறைபிடிக்கப்பட்டது.

Update: 2023-07-20 18:45 GMT

தக்கலை:

தக்கலை அருகே பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வந்த 2 டெம்போக்கள் சிறைபிடிக்கப்பட்டது.

தக்கலை அருகே உள்ள பள்ளியாடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒதுக்குப்புறமான பகுதியில் 2 டெம்போக்களில் கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட முயற்சித்துள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த கழிவுகளை கொட்ட விடாமல் 2 டெம்போக்களையும் சிறைபிடித்தனர்.

மேலும் இதுகுறித்து வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி தலைவர் ஜாண் டென்சிங்கிற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் ஒரு நகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை இங்கே கொட்ட வந்தது தெரியவந்தது.

பின்னர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனிமேல் கழிவுகளை கொட்ட வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். டெம்போவில் கழிவுகளை கொண்டு வந்தவர்களையும் எச்சரித்து அனுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்