2 வாலிபர்கள் சிக்கினர்

பழனியில் நாயை தலைகீழாக தூக்கி சென்ற சம்பவத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-07-01 17:33 GMT

பழனி காந்தி மார்க்கெட் சாலையில் மொபட்டில் சென்ற வாலிபர்கள் 2 பேர் நாயை தலைகீழாக தொங்க விட்டபடி சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இச்சம்பவம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த பழனி போலீசார் நாயை துன்புறுத்தியதாக பழனியை அடுத்த சின்னகலையம்புத்தூரை சேர்ந்த மகுடீஸ்வரன் (வயது 28) மற்றும் 18 வயதுடைய வாலிபர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்