சிவன்மலை கிரிவலப்பாதையில் பாம்புகள் நடனம்
சிவன்மலை கிரிவலப்பாதையில் பாம்புகள் நடனம்;
காங்கயம்
காங்கயம் அருகே சிவன்மலை கிரிவலப்பாதையில் நேற்று பக்தர்கள் சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது மாலை சுமார் 5.30 மணியளவில் பக்தர்கள் கிரிவலப்பாதையில் சுற்றி வரும் போது பாதையில் 5 அடி நீளமுள்ள 2 பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தது. பாம்புகள் நடனம் அரை மணி நேரம் நீடித்தது. பின்னர் மெது மெதுவாக நகர்ந்து 2 பாம்புகளும் பிரிந்து புதருக்குள் சென்று மறைந்தது. பாம்புகள் நடனத்தை அந்த வழியாக வந்தவர்கள் நின்று ஆச்சரியத்த்துடன் பார்த்து சென்றனர்.