புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.;

Update:2023-09-01 01:13 IST

சமயபுரம்:

சமயபுரம் தேரடிவீதி மற்றும் கடைவீதியில் உள்ள 2 டீக்கடைகளில் தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து அபராதங்கள் செலுத்திய பின்னர் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததால், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனாவின் அவசர தடையாணை உத்தரவின்படி திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த 2 டீக்கடைகளுக்கும் நேற்று முன்தினம் 'சீல்' வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்