காரில் பேசி கொண்டிருந்த இளம்ஜோடியை மிரட்டி ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் கைது

காரில் பேசி கொண்டிருந்த இளம்ஜோடியை மிரட்டி ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-03-13 08:23 GMT

இளம்ஜோடியை மிரட்டினர்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் மணிபாரதி (வயது 33) முதல் நிலை போலீஸ்காரராகவும், அமிர்தராஜ் (32) இரண்டாம் நிலை போலீஸ்காரராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.ரோந்து பணிக்கு சென்ற மணிபாரதி, அமிர்தராஜ் இருவரும் படப்பை அருகே சாலையோரம் காரில் பேசி கொண்டிருந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்ஜோடியை விசாரிப்பது போல் மிரட்டி பணம் கேட்டனர்.

அவர்கள் பணம் இல்லை என்று கூறவே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் தெரியுமா? என்று மிரட்டி 'கூகுள் பே' மூலம் ரூ.4 ஆயிரம் அனுப்புங்கள் என்று கேட்டுள்ளனர்.

இதில் பயந்துபோன இளம்ஜோடி 'கூகுள் பே' மூலம் ரூ.4 ஆயிரம் அனுப்பி வைத்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு நேற்று புகார் வந்தது. புகாரை தொடர்ந்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கைது

போலீஸ் விசாரணையில் அவர்கள் இருவரும் இளம்ஜோடியை மிரட்டி ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து மணிமங்கலம் போலீசார் மணிபாரதி, அமிர்தராஜ் இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்