புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிபதி உள்பட 2 பேர் படுகாயம்

திருமயத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிபதி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-08-18 18:41 GMT

கார்கள் மோதல்

புதுக்கோட்டை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருபவர் ஜெயக்குமாரி ஜெமிரத்னா. இவர் நேற்று இரவு அவரது காரில் புதுக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி திருமயம்-மதுரை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருமயம் புதிய கோர்ட்டு பகுதியில் கார் சென்றபோது எதிரே வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த நீதிபதி மற்றும் அவரது கார் டிரைவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை

இதையடுத்து, அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நீதிபதி மற்றும் கார் டிரைவர் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ் (வயது 29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்