மோட்டார் திருடிய 2 பேர் கைது
வள்ளியூர் அருகே தோட்டத்தில் மோட்டார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூரைச் சேர்ந்த சேர்மசெல்வம் என்பவரது தோட்டத்தில் அவரும், அவரது சகோதரும் நெல் அறுவடை எந்திரத்தை நிறுத்தி வைத்து இருந்தனர். சம்பவத்தன்று அந்த எந்திரத்தில் பேட்டரி மற்றும் மோட்டார், இரும்பு பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து சேர்மசெல்வம் அளித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அந்த பொருட்களை திருடியதாக வேப்பன்குளத்தை சேர்ந்த மகாராஜன் (வயது 26), தாமரைகுளத்தை சேர்ந்த பேச்சிமுத்து (45) ஆகியோரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராபின்சாலு கைது செய்தார்.