மணல் கடத்திய 2 பேர் கைது

மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சரக்கு வேன், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-12-25 18:19 GMT

கறம்பக்குடி அருகே மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துவார் பஸ் நிறுத்தம் அருகே சென்ற சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அப்பகுதி காட்டாற்றில் இருந்து மணல் கடத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக டிரைவர் மதன் (வயது 31), உரிமையாளர் ராசு (58) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் இலுப்பூர் அருகே உள்ள கலிங்கிப்பட்டி பகுதியில் சிலர் மணல் கடத்துவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் இலுப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் நிகல்யா தலைமையிலான போலீசார் கலிங்கிப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிராக்டர் உரிமையாளர் கீழக்களம் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்