தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.;

Update:2023-10-10 00:15 IST

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் குமார் (வயது 42). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அருணாசலம் மகன் அண்ணாமலை (50) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று குமார் தனது மோட்டார் சைக்கிளில் மேலப்பட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அண்ணாமலை மற்றும் இவரது மகன்கள் பச்சையப்பன்(20), சதீஷ்(17) ஆகியோர் குமாரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த குமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலை உள்ளிட்ட 3 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சைய்யபன், சதீஸ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்