மது விற்ற 2 பேர் சிக்கினர்

மது விற்ற 2 பேர் சிக்கினர்

Update: 2023-07-24 19:00 GMT

ஊட்டி

ஊட்டி மதுவிலக்கு போலீசார் கோழிப்பண்ணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும், அவரிடம் இருந்த பையை சோதனை செய்ததில் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவர் உல்லத்தியை சேர்ந்த ரமேஷ் (வயது 31) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் பில்லிகம்பை பஸ் நிறுத்தம் பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஊட்டி மடித்துறையை சேர்ந்த குண்டன் (44) என்பவரும் கைது செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்