ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் சிக்கினர்

சேரன்மாதேவி அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் சிக்கினர்.;

Update: 2023-09-18 19:18 GMT

நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் போலீசார் சேரன்மாதேவி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த லோடு ஆட்டோவில் 10 பைகளில் தலா 40 கிலோ எடையுள்ள ஆயிரத்து 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ரேஷன் அரிசி கடத்தியதாக முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை லூர்துசாமி மகன் அந்தோணிராஜ் (வயது 42), சிறுக்கன்குறிச்சியை சேர்ந்த பாண்டி மகன் முருகன் (29) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிசி மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்